ஆஸ்திரேலிய அணியில் 2015-ம் ஆண்டு ஆடம் வோக்ஸ் தனது 35-வது வயதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே அவுட்டாகாமல் 130 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் அதிக வயதில் அறிமுகமாகி, அதே போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், இலங்கை தொடரில் மிகவும் மோசமாக விளையாடினார்கள். அதன்பின் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரிலும் மோசமாக விளையாடினார்.
இதனால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன் இலங்கை அணி பிரதமர் மினிஸ்டர் லெவன் அணிக்கெதிராக பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது. இதற்கான அணியில் ஆடம் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதான் எனது கடைசி போட்டி என்று ஆடம் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
வோக்ஸ் 2015-ல் இருந்து 31 இன்னிங்சில் 5 சதங்கள் உள்பட 1485 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 61.87 ஆகும். டான் பிராட்மேன் 80 இன்னிங்சில் 29 சதங்களுடன் 6996 ரன்கள் குவித்துள்ளார. சராசரி 99.94 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் மிகச் சிறந்த சராசரி ஆகும்.