தெண்டுல்கரும், ரிச்சர்ட்சும் இணைந்த கலவை கோலி: கபில்தேவ்

வங்காளதேச அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த டெஸ்டிலும் இந்திய அணி கேப்டன் வீராட்கோலி இரட்டை சதம் அடித்தார்.

இதன் மூலம் 4 டெஸ்ட் தொடர்களிலும் தொடர்ச்சியாக 4 இரட்டை சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

பிராட்மேன், டிராவிட் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் தொடர்களில் மூன்று இரட்டை சதம் அடித்து இருந்தார்.

இந்த நிலையில் வீராட் கோலியை இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் வெகுவாக பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் எப்போதுமே கண்டிராத வகையில் வீராட் கோலி மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

தெண்டுல்கர், ரிச்சர்ட்சின் கலவை கோலி ஆவார். ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் இதே அதிரடியை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி புனேயில் தொடங்குகிறது.

வீராட்கோலி தலைமையில் இந்திய அணி 23 டெஸ்டில் 15-ல் வெற்றி பெற்றுள்ளது. 2 டெஸ்டில் தோற்றது. 6 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

இந்திய அணி தொடர்ச்சியாக 19 டெஸ்டில் தோல்வியை தழுவவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்த சாதனையை கோலி தொடர்வாரா என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி வலுவானது என்பதால் இந்த டெஸ்ட் தொடர் வீராட் கோலிக்கு சவாலாக இருக்கும்.