எகிறும் ரஜினியின் 2.0 பட பட்ஜெட்?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் இணைந்து `2.0′ படத்தில் நடித்து வருகின்றனர்.  முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் முதலில் வெளியான `எந்திரன்’ படம் மிகப்பெரிய ஹிட்டை பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக 2-வது பாகமாக `2.0′ படம் தயாராகி வருகிறது.

`2.0′ படத்திற்கு இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

லைகா புரெடெக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று  வருகிறது. இந்திய திரைப்பட உலகில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படங்களில் ஒன்றாக `2.0′ படம் தயாராகி வருகிறது.  லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சுமார் 450 கோடி செலவில் `2.0′ படத்தை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  2017 தீபாவளி ரிலீசாக படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.