சூர்யா நடிப்பில் ‘சி3’ படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. `சிங்கம்’, `சிங்கம் 2′ படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3′ படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா – அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், விவேக், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த 9-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படம் ரிலீசான 6 நாட்களிலேயே 100 கோடியை வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு இடையே வெளியான `சி3′ படம் நல்ல வசூலை குவித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பொதுவாக சூர்யாவின் படங்களை விரும்பி பார்க்கும் தந்தை சிவக்குமார் அவ்வப்போது பாராட்டுகளையும் தெரிவிப்பாராம். ஆனால் சமீபத்தில் வெளியான `சி3′ படத்தை பார்த்த சிவக்குமார் சூர்யாவை கட்டித் தழுவியதாக சூர்யா தெரிவித்துள்ளார். தந்தையின் தழுவல் பெற்ற மகிழ்ச்சியில் சூர்யா, வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இயக்குநர் ஹரிக்கு டோயடோ ஃபார்டியூனர் காரை பரிசளித்துள்ளார்.
முன்னதாக `பசங்க 2′ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜுக்கு சூர்யா கார் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.