தேவையான பொருட்கள் :
கிரீன் டீ – ஒரு டீஸ்பூன்,
ஓமம் – கால் டீஸ்பூன்,
பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் 2 தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கிரீன் டீயுடன் ஓமத்தைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். 1 கப்பாக சுண்டும் வரை கொதிக்க விடவும்.
* சாறு இறங்கியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: வைட்டமின்கள், ஏ, கே, இ, சி, ஃபோலிக் அமிலம், செலீனியம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. ஃபோலிக் அமிலம் உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. செரிமானத்தை மேம்படுத்தும். நுரையீரல் அழற்சியைப் போக்கும். சளி, இருமலைத் தடுக்கும். தொண்டைப் புண்ணைக் குணமாக்கும்.