குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க முடியாது.. படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க முடியாது!!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், அரசு நிதியில் அவருக்கு நினைவிடம் அமைக்க முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால், அவருக்கான சிறை தண்டனை மட்டும் விலக்கிக்கொள்ளப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். இதற்காக அவரது சொத்துக்களை விற்று அபராதத் தொகையை அரசு வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மற்றொரு சிக்கலும் எழுந்துள்ளது. ஜெயலலிதா சமாதியில் தமிழக அரசின் சார்பில் அவரது நினைவிடம் பிரமாண்டமாக கட்டப்படும் என்று சசிகலா ஏற்கனவே அறிவித்திருந்தார்.ஆனால், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு செலவில் எந்த நிதியும் ஒதுக்கி கவுரவிக்கப்படாது எனவே இதை அரசு செலவில் செய்ய முடியாது.

மேலும், அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் என்ற கவுரவ அடிப்படையில் பலரது புகைப்படங்களும் உள்ளன. ஆனால் ஜெயலலிதா உருவப்படத்தை இனிமேல் வைக்க முடியாது. எங்கு பார்த்தாலும் பேனர்களும், போஸ்டர்களும் அடித்து தன்னைத்தானே கவுரவித்து மகிழ்ந்த ஜெயலலிதா செய்த குற்றத்தால், இப்போது அவர் மறைந்த பிறகு போட்டோக்களும் இருட்டடிப்பு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.