ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனை தொடர்பான இரு மாநில தீர்வை பாதுகாக்க அனைத்தும் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும் என்று பொதுச் செயலாளர் அந்தோனிய கட்டாரஸ் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் பிரச்சனையில், தனி நாடு தீர்வு மட்டும் அமைதிக்கு வழியல்ல என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அமைதி கொண்டு வர ஒரே நாடு, இரண்டு நாடு தீர்வு எதுவாயினும் இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டால் தான் என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த கருத்தால் இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனையில் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற இரண்டாவது நாளே இஸ்ரேல் அதிபருடன் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்காலமாக பகை நிலவி வருகிறது. ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருகிறது.
இதை தடுத்து நிறுத்தக்கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த டிசம்பர் மாதம் (டிச.23) ஓட்டெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா மட்டும் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்து இருந்தது.