தோஷம் போக்கும் அக்னி தீர்த்தம்!

ராமேஸ்வரம் கடல் ‘அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சீதாதேவியின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்ய வைத்தார் ராமர். அப்போது சீதையின் கற்புத்திறன், அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி பகவான், இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தைத் தணித்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.

மேலும் சீதையை தொட்ட தோஷம் நீங்குவதற்காகவும், அக்னி பகவான் இந்தக் கடலில் நீராடியதாக புராணம் தெரிவிக்கிறது. அக்னி தீர்த்தத்தில் நீராட, கடலில் இடம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது

தீர்த்தங்களும்.. பலன்களும்..

மகாலட்சுமி தீர்த்தம் – செல்வ வளம் பெருகும்.

சாவித்திரி தீர்த்தம் – பேச்சுத் திறன் வளரும்.

காயத்ரி தீர்த்தம் – உலக நன்மை உண்டாகும்.

சரஸ்வதி தீர்த்தம் – கல்வியில் உயர்வு தரும்.

சங்கு தீர்த்தம் – வசதியாக வாழ்வு அமையும்.

சக்கர தீர்த்தம் – மன உறுதி கிடைக்கும்.

சேதுமாதவ தீர்த்தம் – தடைபட்ட பணிகள் தொடரும்.

நள தீர்த்தம் – தடைகள் அகலும்.

நீல தீர்த்தம் – எதிரிகள் விலகுவர்.

கவய தீர்த்தம் – பகை மறையும்.

கவாட்ச தீர்த்தம் – கவலை நீங்கும்.

கந்தமாதன தீர்த்தம் – எத்துறையிலும் வல்லுநர் ஆகலாம்.

பிரம்மஹத்தி தீர்த்தம் – பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

கங்கா தீர்த்தம் – பாவங்கள் அகலும்.

யமுனை தீர்த்தம் – பதவி வந்து சேரும்.

கயா தீர்த்தம் – முன்னோர் ஆசி கிடைக்கும்.

சர்வ தீர்த்தம் – முன்பிறவி பாவம் விலகும்.

சிவ தீர்த்தம் – சகல பிணிகளும் நீங்கும்.

சத்யாமிர்த தீர்த்தம் – ஆயுள் விருத்தியாகும்.

சந்திர தீர்த்தம் – கலை ஆர்வம் பெருகும்.

சூரிய தீர்த்தம் – முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.

கோடி தீர்த்தம் – முக்தி அடையலாம்.