மும்பையில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து இருந்த ஜாலி எல்.எல்.பி-2 என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த படத்தில் கோர்ட்டில் நடைபெறும் காட்சி ஒன்றில் நடிகர் அன்னுகபூர் ஒரு நிறுவனத்தின் செருப்பு குறித்து பேசி இருந்த ஒரு வசனம் இழிவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படத்தில் நடிகர் அக்ஷய் குமார் அந்த செருப்பை கொண்டு ஒருவரை அடிக்கும் காட்சியும் இடம்பெற்று உள்ளது. இதனால் அந்த தனியார் செருப்பு நிறுவனத்தினர் தங்களின் உற்பத்தி பொருளை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி, திரைப்பட நடிகர் அக்ஷய் குமார், படத்தயாரிப்பாளர் நரேன் குமார், நடிகர் அன்னு கபூர், இயக்குனர் சுபாஷ் கபூர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக வருகிற 22-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு நடிகர் அக்ஷய் குமார் உள்பட 4 பேருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.