பௌத்த மதத்துக்காக முதலில் குரல்கொடுக்கப் போகின்றவன் நான்தான் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்குரிய இடம் வழங்கப்படாதிருந்தால், அதற்கு எதிராக குரல்கொடுக்க போகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற தனியார் வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னர் இடம்பெற்ற யாப்புச் சீர்திருத்தத்தில் உள்ளடக்கப்படாத ஜனநாயகவாத விடயங்கள் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.