கமலஹாசன் இயக்கி நடித்த கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான `விஸ்வரூபம்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இரு பாகமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் முதல் பாகம் வெளியான நிலையில், இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாக படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் `விஸ்வரூபம் 2′ படத்தின் பணிகளில் தொய்வு ஏற்ப்பட்டது.
மேலும், பல சிக்கல்களை சந்தித்த பின்னரே `விஸ்வரூபம்’ படத்தை கமல் ரிலீஸ் செய்தார். அதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2′ படம் தயாராகி வருகிறது.
`விஸ்வரூபம் 2′ படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கமல் `சபாஷ் நாயுடு’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், `விஸ்வரூபம் 2′ படத்தின் முக்கிய பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும், தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்களை மட்டுமே சமாளிக்க வேண்டியிருப்பதாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
`விஸ்வரூபம்’ முதல் பாகத்தில் நடித்திருந்த பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட அனைவரும் இரண்டாவது பாகத்திலும் நடித்துளனர். இப்படத்தை கமல் அவரது சொந்த தயாரிப்பில் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஸன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், 6 மாதங்களில் படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.