`விஜய் 61′ படத்தில் ஆபத்தான ஸ்டன்ட்களில் பாதுகாப்பு கவசங்களின்றி நடிக்கும் விஜய்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிமுகங்கள், தொழில்நுட்பங்கள் என அதன் அடுத்த  நிலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில், ரசிகர்களை கவரும் வகையில் நடிகர்களும்,  நடிகைகளும் தங்களது பங்களிப்பை பலவிதங்களில் அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர்கள் ஆபத்தான ஸ்டன்ட்களில் டூப் ஏதுமின்றி தாமாகவே நடித்து ரசிகர்களை கவர்கின்றனர். இவ்வாறு டூப்  போடாமல் ஸ்டன்ட்களில் ஈடுபடுவது நடிகர் விஜய்க்கு ஒன்றும் புதிதல்ல. முன்னதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த `தெறி’  படத்தில் 90 அடி பாலத்தில் இருந்து எந்தவித பாதுகாப்பு அம்சங்களுமின்றி தண்ணீரில் குதித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அந்த வகையில் `விஜய் 61′ படத்தில் அவரது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான விருந்து காத்திருக்கிறது. விஜய் தற்போது அட்லி  இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதில்  ஒரு முக்கியமான காட்சியில் விஜய் பாதுகாப்பு கவசங்கள் ஏதுமின்றி ஆபத்தான ஸ்டன்ட் ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார். இந்தகாட்சி திரையில் வரும்போது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில்  சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.