தேவையான பொருட்கள் :
பிஞ்சு பாகற்காய் – 200 கிராம்
பாசிப்பருப்பு – 100 கிராம்
இலவங்க இலை – 2
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
ப.மிளகாய் – 1
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தண்ணீர் – அரை லிட்டர்
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
செய்முறை :
* கொத்தமல்லி, பாகற்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாசிப்பருப்பை வேகவைத்து நீரில் கரைத்து கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் கீறிகொள்ளவும்.
* பாகற்காயை வேகவைத்து கொள்ளவும்.
* வாணலியில் நெய் ஊற்றி சீரகம், இலவங்க இலையை சேர்த்து தாளித்த பின் பாகற்காயை போட்டு சிறிது வதக்கிய பின்னர், மிளகுதூள், இஞ்சி விழுது, ப.மிளகாய் இட்டு நன்கு வதக்கி கரைத்து வைத்துள்ள பருப்பு கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* இதை பருகினால் ஜீரண கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். கல்லீரல் நோயாளிகளுக்கும் இது ஏற்ற உணவு.