தேவையான பொருட்கள் :
கற்றாழை ஜெல் – 100 கிராம்,
எலுமிச்சம் பழம் – 1,
தேன் – தேவையான அளவு,
இஞ்சி, உப்பு – சிறிதளவு.
செய்முறை :
* இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
* எலுமிச்சை சாறு, தேன், உப்பு, இஞ்சி இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும்.
* அடுத்து மிக்சியில் கற்றாழை ஜெல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.
* அரைத்த கற்றாழை ஜூஸ், இஞ்சி சாறு இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து பருகவும்.
* சூப்பரான இஞ்சி – கற்றாழை ஜூஸ் ரெடி.
* தண்ணீருக்கு பதிலாக மோரையும் பயன்படுத்தலாம்.
பலன்கள்: கற்றாழை, சரும நோயை சரிப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சியைத்தரும்.