முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மயிலாப்பூர் சட்டசபைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ நடராஜ் கூறியுள்ளார். கட்சித்தாவல் சட்டம் பாய்ந்தாலும் கவலையில்லை என்றும் கூறியுள்ளார். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் நடராஜ் கூறியுள்ளார்.
தங்களுக்கு 124 எம்எல்ஏக்கள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 123 ஆக குறைந்துள்ளது. தனது எம்எல்ஏ பதவியே பறிபோனாலும் பரவாயில்லை. நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவே வாக்களிப்பேன் என்று எதிர்ப்பை தெரிவித்துள்ளார் நடராஜ் எம்எல்ஏ.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜ் எம்எல்ஏ, மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதுதான் ஒரு சட்டசபை உறுப்பினரின் கடமை என்று கூறினார். அந்த வகையில் நான் மக்களின் பக்கமே நிற்கிறேன். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்று கூறியுள்ளார்.
ஓபிஎஸ் அணிக்கு மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் ஆதரவு அளித்துள்ளதன் மூலம் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.