மக்களின் விருப்பபடி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கப் போவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் அறிவித்து விட்டார். இதனால், எடப்பாடி தரப்பில் மேலும் பலர் அணி மாறி வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தற்போது தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கட்டிக் காட்ட கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்., நேற்று பதவியேற்பு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏக்களை மீண்டும் கூவத்தூருக்கே கொண்டு போய் அடைத்துள்ளனர். அவர்களில் பலர் நேற்று சென்னைக்கு வரவே இல்லை.
அவர்கள் அனைவருமே எடப்பாடியை ஏற்கவில்லை. இதனால்தான் எடப்பாடி தரப்பு பெரும் பீதியில் உள்ளது. இருப்பவர்களையும் விட்டு விடக் கூடாது என்பதால்தான் மீண்டும் கூவத்துருக்கே கொண்டு போய் அடைத்து விட்டனர்., இந்த பீதி காரணமாகத்தான் எடப்பாடி பெங்களூரு சிறைக்குக் கூட போகவில்லை. மாறாக இங்கேயே தங்கியிருக்கிறார்.
ஆனால் தற்போது வெளிப்படையாக எடப்பாடிக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளார். இது கூவத்தூர் எம்.எல்.ஏக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனது பதவியே போனாலும் பரவாயில்லை, எடப்பாடியை ஆதரிக்க மாட்டேன் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார். இது கூவத்தூர் கூடாரத்தில் குண்டு வீசலாம் என்ற எதிர்பார்ப்பில் ஓ.பி.எஸ் அணி உள்ளது.