கடைசி வாய்ப்பு… ஆதரவு எம்எல்ஏக்களுடன் 10 மணிக்கு சட்டசபை செல்கிறார் ஓபிஎஸ்!

ஓ.பன்னீர்செல்வம் காலை 10 மணிக்கு சட்டசபைக்கு புறப்படுகிறார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் இருந்து அவருடன் சேர்ந்து புறப்படவுள்ளனர்.

சசிகலா ஆதரவு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதற்காக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதற்காக கூவத்தூரில் கடந்த 10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். எடப்பாடி கூடாரத்தில் இருந்து ஒரு எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஓட்டம் பிடித்துள்ளதால் எஞ்சியுள்ள எம்எல்ஏக்கள் மிக பத்திரமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களான செம்மலை, மாஃபா பாண்டியராஜன், சண்முகநாதன் உள்ளிட்ட 11 பேரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து காலை 10 மணிக்கு அவரது வீட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.