மனித குரங்கு அழியும் வன விலங்குகள் பட்டியலில் உள்ளது. எனவே அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தோனேசியாவில் அவை பாமாயில் விளை நிலங்களில் வசிக்கின்றன.
இந்த நிலையில் அங்கு சுற்றித் திரிந்த ஒரு மனித குரங்கை பிடித்த 3 பேர் அவற்றை கொன்று இறைச்சியாக வெட்டினர். பின்னர் அவற்றை சமைத்து சாப்பிட்டனர்.
இவர்கள் பாமாயில் மர விவசாய பண்ணையில் பணி புரியும் ஊழியர்கள் ஆவர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் கைது செய்தனர்.
கொன்று சமைக்கப்பட்ட மனித குரங்கின் எலும்புகள் மற்றும் காயவைக்கப்பட்ட இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அழியும் வனவிலங்குகள் பட்டியலில் மனித குரங்கு இருப்பதால் அவற்றை கொல்வது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. எனவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.