கடற்புலிகளின் தாக்குதல் முறைகள்! பாகிஸ்தானில் விளக்கமளித்த இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படை தொடர்பில் பாகிஸ்தானில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, அந்நாட்டு கடற்படையினருக்கு விளக்கம் அளித்தார்.

லாகூரில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கல்லூரியில் நடைபெற்ற செயலமர்வில், விடுதலைப் புலிகளின் கடற்படையின் சாதக, பாதக நிலையை விபரித்தார்.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் அதிகாரிகள் மத்தியில், மரபுசாரா எதிரியுடனான இலங்கை கடற்படையின் போர் அனுபவங்கள் என்ற தொனிப்பொருளில் உரையாற்றினார்.

விடுதலைப் புலிகளுடன் இலங்கை கடற்படை எவ்வாறு போரிட்டது. தாக்குதல்களை எவ்வாறு அவர்கள் எதிர்கொண்டனர். 30 வருடங்களாக நீடித்த போரில் எவ்வாறு வெற்றி கொள்ளப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

கடற்புலிகளின் அதீத வளர்ச்சி, தற்கொலை தாக்குதல் அச்சுறுத்தல், இலங்கை கடற்படையின் பதில் நடவடிக்கை, தற்கொலை தாக்குதல்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள். சிறிய படகுகள் கருத்திட்டம் குறித்த ஆய்வும், அபிவிருத்தியும், விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் அழிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கடற்படைத் தளபதி விளக்கம் அளித்தார்.