லண்டன் விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது!

லண்டன் விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இசைக்கலைஞர் தசன் மதுஷான் (Dasun Madushan) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதிகள் ஊடாக இரண்டு கிலோகிராம் கொக்கேய்ன் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது.

லண்டன் ஹித்ரு விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் லண்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பாடகர் மறுத்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் தனது அதிருப்பதியை அவர் வெளியிட்டுள்ளார்.

“இது சிறந்த நகைச்சுவையாக உள்ளது” எனவும் தசன் மதுஷான் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.