முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்!

முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என பொலிஸார் கோரியுள்ளனர்.

முகநூல் ஊடாக நட்புறவை ஏற்படுத்தி மோசடியான முறையில் பணம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவாகின்றன என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பணம் மோசடி செய்த 10 நைஜீரிய பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்னளர்.

தனிப்பட்ட தகவல்களை பெற்றுக் கொண்டு வங்கிகளின் ஊடாக மோசடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரிய பிரஜைகள் சுற்றுலா வீசாக்களின் மூலம் இலங்கைக்குள் பிரவேசித்து முகநூல் ஊடாக மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாகக் கூறி இவ்வாறு பணம் மோசடி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தொகைப் பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது