பிரதமரையும், பொன்சோகாவையும் பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், அமைச்சர் சரத் பொன்சேகாவையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான அறிக்கையில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் பிரதமரையும், சரத் பொன்சேகாவையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கூட்டுக் குழு என்ற அமைப்பு அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கான பேச்சு நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சரத் பொன்சேகா, இந்திய ஊடகவியலாளர்களை அண்மையில் சந்திதத்தபோது தெரிவித்திருந்தாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும், அதற்கு மாறுபட்ட கருத்தை பிரதமர் வெளியிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் தவறான அனுகுமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாக கண்டறியப்பட்டால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், அமைச்சர் சரத் பொன்சேகாவையும் பதவி நீக்கம் செய்யுமாறு தேசிய கூட்டு அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.