பிளேடு வச்சிருக்கோம்.. தொட்டீங்க தற்கொலை செய்வோம்.. போலீசை எச்சரித்த ஸ்டாலின், துரைமுருகன்

எங்களை வெளியேற்ற முயன்றால் தற்கொலை செய்துகொள்வோம் என்று ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய திமுக சீனியர்கள் மிரட்டல்விடுத்தும் போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றியுள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நேற்று திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபை நேற்று மதியம் 1 மணி முதல் 3 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முற்பட்டனர்.

இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவை காவலர்கள் எப்படியும் வெளியேற்றிவிடுவார்கள் என்ற சூழ்நிலை வந்தபோது, “எங்களை வெளியேற்றினால் தற்கொலை செய்துவிடுவோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். துரைமுருகனோ, “எங்களிடம் பிளேடு உள்ளது. நீங்கள் தொட்டால், வெட்டிக்கொள்வோம்” என்று எச்சரித்துள்ளார்.

ஆனால் இதை காதில் போட்டுக்கொள்ளவில்லை காவலர்கள். குண்டுக் கட்டாக தூக்கி சட்டசபைக்கு வெளியே போட்டுவிட்டனர்.