ஹிட்லரின் டெலிபோன் அமெரிக்காவில் ஏலம்

ஜெர்மனியை சேர்ந்த சல்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் 2-வது உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தார். உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்தார்.

இவர் தனது தனிப்பட்ட முறையில் டெலிபோனை பயன்படுத்தினார். சிவப்பு நிறமுடையது. இரண்டாம் உலகப்போரின் போது இதன் மூலம் தான் ஹிட்லர் தனது அதிகாரம் மிக்க உத்தரவுகளை பிறப்பித்தார். அதனால் பேரழிவுகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

அத்தகைய டெலிபோன் கடந்த 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு பாதுகாப்பு கிடங்கு அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. போரின் முடிவில் ஜெர்மனி சரண் அடைந்த பிறகு சோவியத் ரஷிய வீரர்கள் அதை மீட்டு இங்கிலாந்து பிரிகேடியர் சர் ரால்ப் ராய்னரிடம் ஒப்படைத்தனர்.

இத்தகைய டெலிபோன் அமெரிக்காவின் மேரி லேண்டில் உள்ள செசாபீக் நகரின் அலெக்சாண்டர் மையத்தில் ஏலம் விடப்படுகிறது.

ஹிட்லர் பயன்படுத்திய இந்த டெலிபோன் இங்கிலாந்து பிரிகேடியர் சர்ரால்ப்பின் மகனிடம் உள்ளது. ஏலத்தொகை ரூ.80 லட்சத்து 56 ஆயிரத்து 700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ரூ.3 கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.