நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை பெண்களே தோற்கடிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வதேச பெண்கள் தினத்தில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.