-
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். போராடி வெல்லும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக் கும். ஆடை, ஆபரணம் சேரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தி னர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: பிரியமானவர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்துப் போகும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
கன்னி
கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார் கள். பூர்வீக சொத்து பிரச் னைக்கு தீர்வு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக் கப் பாருங்கள். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும். வேலையாட் களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
-
தனுசு
தனுசு: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.
-
மகரம்
மகரம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.
-
கும்பம்
கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சாதிக்கும் நாள்.
-
மீனம்
மீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெரு