அவுஸ்திரேலியாவுடன் டீ.20 தொடரை வெற்றி கொண்ட இலங்கை அணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி இலங்கைக்கு புகழைத் தேடித் தந்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தொடரில் சிறந்து விளங்கிய அசேல குணரத்னவுக்கும் ஜனாதிபதி தனது விசேட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.