தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. எய்ட்ஸ் வைரஸ் பரவுவதை தடுக்கும் நாடு என்ற வகையில் இலங்கைக்கு சான்றிதழ் ஒன்று கிடைக்கவுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் உலக சுகாதார அமைப்பிடமிருந்து இந்த சான்றிதழ் கிடைக்கவுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பணிப்பாளர், வைத்தியர் சிசிர லியனகே கருத்து தெரிவிக்கையில், 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தாய்மார்களில் 95 சதவீதமானர்வள் எயிட்ஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கியுபா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தாயிடமிருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவதை தடுத்த நாடுகள் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.