ஜே.வி.பியை அரசியலிலிருந்து ஓரம் கட்டுவதற்கு முயற்சிக்கப்படுவதாக கட்சியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பெலத்த பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
புதிய தேர்தல் முறை ஒன்றின் ஊடாக ஜே.வி.பியை அரசியலிலிருந்து ஓரம் கட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மக்களினால் நிராகரிக்கப்பட்டு வருகின்றது.
ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோர் கள்வர்கள் போன்வறர்களை இந்த இரண்டு கட்சிகளும் பாதுகாத்து வருகின்றது.
எனவே ஜே.வி.பி மீது மக்கள் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு ஜே.வி.பி பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் கட்சிகளுக்கு எதிராக காணப்படும் ஜே.வி.பி கட்சி மக்களுக்கு நலன்களையே வழங்கி வருகின்றது.
கலப்பு முறையிலான தேர்தல் அறிமுகம் செய்யப்படுவதற்கான பிரதான காரணம் ஜே.வி.பியை அரசியலிலிருந்து ஓரம் கட்டும் நோக்கிலாகும்.
இந்த கலப்பு முறையிலான புதிய தேர்தல் முறைமை பல்கட்சி அரசியலுக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ளது, இந்த முறையை ஜே.வி.பி எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.