நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்படும் காட்சிகளைக் கொண்ட விஷூவல் எபக்ட்ஸ் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுகின்றன.
இந்தநிலையில் தீபன் என்ற இளம் இயக்குனர் ‘மாயா மீடியா வொர்க்’ மற்றும் ஆம்சி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு விஷூவல் எபக்ட்ஸ் சார்ந்த படத்தை தொடங்குகிறார்.
இந்த படத்தில் ஒரு முக்கியமான தேசிய தலைவரின் மரணத்தில் உள்ள மர்மங்களை மிகவும் சுவாரஸ்யமான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளனர்.
ஹாலிவுட் படங்களில் வருவது போல், இந்த திரைக்கதையில் கதாநாயகன் நியூரல் சிமுலேஷன் மூலம் பல்வேறு வித்தியாசமான இடங்களுக்கு பயணம் செய்து பல தடைகளை மீறி அந்த மர்மங்களை கண்டுபிடிக்கிறார். அது போன்ற பாணியில் உருவாக்கும் முதல் தமிழ் படம் இது.
புதுமுகம் வைதேஷ் ஹரிஹரன் இதில் ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெறுகிறது.
இயக்குனர் தீபக் கூறும் போது “இந்த திரைப்படம் தற்போது ஆரம்ப விஷூவல் நிலையில் உள்ளது.
மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட உள்ள இந்த படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் நிச்சயமாக அனைவருக்கும் பிடித்ததாக அமையும். இது அனிமேஷன் மற்றும் விஷுவல் எபக்ட்ஸ் திரைபடங்களுக்கு ஒரு புரட்சிகரமான தொடக்கமாக அமையும்.
இந்த படத்திற்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது பெற்ற ப்ரெட் ஆலன் மற்றும் விஜய் கூட்டணி இசை அமைக்க உள்ளனர்.