பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேர் கைது

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா. இவர் தமிழில் ‘தீபாவளி’, ‘சித்திரம் பேசுதடி’, ‘அசல்’, ‘ஜெயம் கொண்டான்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர், நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா நேற்று முன்தினம் இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மர்ம கும்பல் ஒன்று இவரது காரை வழிமறித்து, அதில் ஏறி அவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக செய்திகள் வெளிவந்தது.

இதுதொடர்பாக, பாவனாவின் கார் டிரைவரான மார்ட்டின் மீது போலீசார் சந்தேகப்பட்டு, அவரை நேற்று விசாரணை செய்தது. இந்நிலையில், இன்று டிரைவர் உள்பட 7 பேரை இன்று கேரளா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் யார்? எதற்காக பாவானாவிடம் அத்துமீறினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.