1) கிரக தோஷம் நிவர்த்தியும், இஷ்ட காரிய சித்தியும் உண்டாகும். (ஆதாரம்: கிரக தசாபல தர்ப்பணம் வீருத்த பராசரம் முதலிய கிரந்தங்கள்)
2) விஷம், பேய், பிசாசுகள், வியாதி, கெட்ட கனவு, கெட்ட நிமித்தம் முதலியவற்றில் ஏற்படும் தீமைகளைப் போக்கும்.
3) பஞ்ச மஹா பாதகங்கள் முதலியனவற்றை போக்கும்.
4) இம்மை, மறுமையில் செல்வங்களை கொடுக்கும்.
5) இந்த ஜென்மத்தில் ஒருவன் முன் வினையால் அனுபவிக்கும் வறுமை நோய்களுக்கு பரிகார சாந்தியாக விளங்குகிறது என்று ‘கர்ம விவாகம்’ என்ற கிரந்தம் கூறுகிறது.
6) விஷ காய்ச்சல், வாத நோய், கபவியாதி, பஹி, மூத்த வியாதி, தோஷம் நீங்குகிறது.
7) குழந்தை பிறந்து தங்காத தோஷம் நீங்குகிறது.
8) சகல காரிய சித்தியும், சகல சௌபாக்கிய சம்பத்துக்களும் உண்டாகும்.
9) பிரம்ம ஸித்தியாகி பாபங்கள் நீங்கும்.
10) விக்னங்கள் பாதிக்காது.
11) தத்துவ ஞானம், கல்வி அறிவு பெருகும்.
12) காணாமற் போன சொத்து திரும்ப பெறுதல், ராஜத்வா கோர்ட் வியாஜ்ஜியங்களில் வெற்றி அளிக்கும்.
13) தடைபடும் விவாஹ சுபமுகூர்த்தம் போன்ற மங்கள காரியங்கள் நடைபெறும்.
14) கிரக வாஸ்து தோஷம் நீங்கும்.
பிரம்ம முகூர்த்த வழிபாடு :
அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் (பிரம்ம முகூர்த்த காலம் என்து 4 முதல் 5 மணி வரையிலிலான காலமாகும்) தீபம் ஏற்றி, இஷ்ட தெய்வத்தை தீபத்தில் ஆவாஹனம் செய்து பூஜித்து வர, அந்த தெய்வத்தை தீப ஒளியில் பார்க்கலாம். இது கண்கூடு. நற்பலன்களை கூட்டுவிக்கும்.