ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சிங்கம்’ படம் 2010-ல் வெளியானது. 2013-ல் ‘சிங்கம்-2’, 2017-ல் ‘சிங்கம்-3’ வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே இதற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
அடுத்து ‘சிங்கம்-4’ எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், சமீபத்தில் ‘சிங்கம்-3’ தெலுங்கு பட வெற்றி விழாவில் ஹரி வெளியிட்ட தகவல்….
இன்னும் 5 அல்லது 6 வருடங்கள் கழித்து தான் சிங்கம் படத்தின் 4-வது பாகத்தை எடுக்க இருக்கிறோம். நான் அடுத்து விக்ரம் நடிக்கும் ‘சாமி’ படத்தின் 2-வது பாகத்தை இயக்க இருக்கிறேன். அந்த படம் முடிந்ததும் மீண்டும் சூர்யா நடிக்க இருக்கும் மற்றொரு படத்தை இயக்குவேன். அந்த படமும், அதில் சூர்யாவின் பாத்திரமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
ஹரியின் இந்த அறிவிப்பால் ‘சாமி-2’ படத்தின் மீதும் சூர்யாவின் அடுத்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.