சத்து நிறைந்த கீரை மண்டி

தேவையான பொருட்கள் :

அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் ஏதேனும் – 1 கட்டு,
சின்ன வெங்காயம் – 15,
தக்காளி – 2,
பச்சைமிளகாய் – 5,
பூண்டு – 10 பல்,
புளி – 50 கிராம்,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள்தூள் – சிறிது.

தாளிக்க…

நல்லெண்ணெய்- 5 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 6,
கடுகு – 10 கிராம்,
சீரகம்- 1 டீஸ்பூன்.

செய்முறை :

* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசி கழுவிய தண்ணீரைத் தெளிய விட்டு, அடியில் தங்கும் மண்டியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

* மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்தமிளகாய் தாளித்து, வெந்த கீரையை சேர்த்து நன்கு மசிக்கவும்.

* இத்துடன் சிறிது புளிக்கரைசல் மற்றும் மண்டியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

* சத்தான கீரை மண்டி ரெடி.