-
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப் பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத் தில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்சனைகள் வரக்கூடும். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத் தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.
-
சிம்மம்
சிம்மம்: குடும்ப வரு மானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
-
கன்னி
கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
-
துலாம்
துலாம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்த வர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். அழகு, இளமை கூடும். கேட்ட இடத் தில் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். உற்சாகமான நாள்.
-
தனுசு
தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலை கழிக்கப்படுவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
-
மகரம்
மகரம்: எதிர்பார்த்த காரியங் கள் தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
-
கும்பம்
கும்பம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். நெடுநாட்க ளாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். உத்யோகத் தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.
-
மீனம்
மீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.