உலகின் மிகப் பெரிய பொருட்களை காவும் கப்பல் இலங்கைக்கைக்கு வருகை தரவுள்ளது.
மோட்டார் வாகனம் மற்றும் ட்ரக் வண்டிகளை கொண்டு செல்லும் உலகின் மிகப் பெரிய கப்பலான Hoegh Tracer கப்பல் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரதில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
14 மாடிகளை கொண்ட இந்த கப்பல், ஒரே முறையில் 8500 வாகனங்களை காவிக் கொண்டு பயணிக்கம் ஆற்றல் கொண்டது.
நோர்வே ஒஸ்லோ Hoegh Autoliners என்ற நிறுவனத்திற்கே இந்த கப்பல் சொந்தமாகும். இந்த கப்பல் போக்குவரத்தின் உள்ளூர் பிரதிநிதியாக Diamond Shipping Services Ltd என்ற நிறுவனம் செயற்படுகின்றது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத்தரும் இந்த கப்பலில், கொண்டுவரப்படும் பாரிய அளவிலான மோட்டார் வாகனங்களை அங்கிருந்து ஏனைய பல நாடுகளுக்கு கொண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.