சினிமா பாணியில் நூதன முறையில் கொள்ளை: நின்ஜா உடையில் பெண் செய்த காரியம்!!

நின்ஜா தற்காப்புக் கலையில் ஈடுபடும் வீரர்கள் அணியும் ஆடைகளை அணிந்து வீடு ஒன்றில் புகுந்து வீட்டில் இருப்பவர்களை அச்சுறுத்தி கொள்ளையிட பெண் ஒருவர் முயற்சித்துள்ளார்.

24 வயதான திருமணமான கயார் ரோசா என்ற பெண்ணே இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இந்த பெண்ணிடமிருந்து கூரிய ஆயுதமொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சினிமா பாணியில் வீட்டின் கூரையை பிரித்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக இந்தப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கணவனைப் பிரிந்து வாழும் குறித்த பெண் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மதுபானத்திற்கு அடிமையான குறித்த பெண் நின்ஜா ஆடையணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

குடாபாடுவ பிரதேசத்தில் செல்வந்த பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து பணம் மற்றும் ஆபரணங்களை கொள்ளையிட முயற்சித்த போது வீட்டில் இருப்பவர்கள் நின்ஜா பெண்ணை மடக்கிப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த பெண் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அத்துடன், வேறு வீடுகளில் கொள்ளையிட்டுள்ளரா என்பது குறித்தும் விசாரணகைள் நடத்தப்பட்டு வருவதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.