2015ஆம் ஆண்டு இலங்கை,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்த பொலிஸ் துஸ்பிரயோக நடவடிக்கைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை.
இந்தநிலையில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் தொடங்கவுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
உறுதியளித்தப்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. தடுப்பில் சித்திரவதைகளும் குறையவில்லை என்று கண்காணிப்பகத்தின் ஆசிய தலைவர் பிரட் அடம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கு உறுதியளித்து 18 மாதங்கள் சென்றுள்ளநிலையில் இலங்கையின் அரசியல் தலைவர்கள் பல்வேறு காரணங்களை கூறி உறுதிமொழிகளை மீறிவருவதாக அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் பலர் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன் பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.