தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ளேயும் வெளியேயும் தமிழர்கள் தரப்பில் பிளவுகள் காணப்படுகின்றன. எனவே ஒற்றுமை மிகவும் அவசியமானது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைலமையிலான அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் தெரிவித்திருந்தார்.
மேலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் குறித்தும் இரா.சம்பந்தன், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கரிடம் எடுத்து கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இந்த விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன், பேசும் போது எடுத்து கூறுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் எனவும், தமிழ் மக்களின் இலக்குகளை அடைவதற்கு ஒற்றுமை மிகவும் அவசியமானது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ளேயும் வெளியேயும் தமிழர்கள் தரப்பில் பிளவுகள் காணப்படுகின்றன. எனவே ஒற்றுமை மிகவும் அவசியமானது என எஸ்.ஜெயசங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.