ஜெ.,வை நடுங்கவைத்த ஒரே தலைவன் ?

ஜெயலலிதாவின் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் சட்ட சபையில் ஜெயலலிதாவை பார்த்து கேட்டார்.

ஆட்சிக்கு வந்து மூணே மாசத்துல இப்படி பால் விலையை ஏத்துறீங்களே? இது என்ன நியாயம்? சாமானிய மக்கள் பாதிக்கப்படுவாங்களே..? என்று கேட்டதோடு கோபத்தில் நாக்கைத்துருத்திக்கொண்டு…. கையை நீட்டியும் ஆவேசப்பட்டார். அவரை வெளியே அனுப்பிவிட்டார்கள்.

அதன் பிறகு ஜெயலலிதா அவர்கள் சொன்னது:

நாங்கள் பால்விலையை உயர்த்திய பின்பு அதே தொகுதியில் நின்று ஜெயித்துக்காட்டுகிறோம். உங்களால் முடியுமா? என்பதுதான்.

ஆனால், மக்கள் விஜயகாந்த் நாக்கை துருத்தியதையும் கோபப்பட்டதையும் கேலிச்சித்திரமாக்கிவிட்டு…அந்தாளோட டெபாசிட்டையும் காலி செஞ்சாங்க.

விலையேற்றம் செய்த அம்மையாரே திரும்பவும் ஆட்சிக்கு வரவச்சாங்க. இப்படிப்பட்ட மக்களுக்குத்தான் நல்ல தலைவன் வேண்டுமாம்.

நல்லவன் யார், கெட்டவன் யார்என்பதைக்கூட நம்மால் அடையாளம்கூட காண முடியவில்லை. திட்டமிட்டே குடிகாரன் என்று பரப்பினார்கள்.

 திமுக,அதிமுக இரண்டு கட்சிகளுமே கேப்டனை திட்டமிட்டு ஒழித்தார்கள். கேலி செய்து மீம்ஸ் போட தனி டெக்னிகல் டீமையே உருவாக்கினார்கள்.

பொதுசபையில் கோபப்பட்ட தங்கள் மீடியா கைக்கூலிகளை ஏவி விட்டார்கள். போகுமிடமெல்லாம் அவரை கோபமூட்டி அதை பதிவு செய்து டப்பிங் பேசி அவரை காமெடி பீஸ் ஆக்கினார்கள்.

நாமும் சேர்ந்து கேப்டனை பார்த்து சிரித்தோம். ஆனால், இரு கட்சிகளும் திட்டமிட்டு நடத்திய மீடியாக் கூத்தை எண்ணிப் பார்க்கவில்லை.

அவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரின் குடும்பம் உள்ளே வரவேண்டிய சூழல். கட்சியைக் கரைத்தார்கள்.

கரைக்க கேப்டன் மனைவியும் ஒரு காரணமாக இருந்தார். இன்று ஒரு நல்ல ஆண்மையுள்ள தலைவன் காணாமல் போனான்.

பட்ட பின் வருந்துவது தமிழர்களின் வழக்கம், பழக்கம்.