தமிழக முதல்வராக பதவி ஏற்க தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து முன்னாள் எம்.பி டிடிவி தினகரனை துணை பொது செயலராக்கி விட்டு சசிலாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சரணடைந்தார்.
சிறையில் இருந்தவாறே தமிழக அரசியல் நிலவரம் குறித்து வக்கீல்களிடம் கேட்டு வருகிறார். இந்த நிலையில், சிறைக்குள் வந்தவுடன் அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவருக்கு பட்டியல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதில் அவர் மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணியை மேற்கொள்வதாக தேர்வு செய்தபோதிலும் அந்தப் பணியை அவர் இதுவரை தொடங்கவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.