நரபலி கொடுத்தால் அதிர்ஷ்டம் பெருகுமாம்: அதிர்ச்சியளிக்கும் உண்மை சம்பவம்!!

ஆப்பிரிக்காவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை நரபலி கொடுக்க நினைத்த கும்பலின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆப்பிரிக்காவின் Malawi நகரில் வசித்து வருபவர் Achulani, அல்பீனிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இப்படியான நோயால் பாதிக்கப்பட்ட மக்களை நரபலி கொடுத்து உடல் பாகங்களை சாப்பிட்டால் அதிர்ஷ்டமும், செல்வமும் பெருகும் என்ற மூடநம்பிக்கை இருந்து வருகிறது.

இதன் காரணமாக Achulani வீட்டுக்கு இரு வருடங்களுக்கு முன்னர் கும்பலொன்று பொலிஸ் என கூறி வந்துள்ளது.

அவரையும், அவர் கணவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அவர்கள் அழைத்துள்ளார்கள்.

அவர்கள் பொலிஸ் உடையில் இல்லாமல் இருந்தாலும் ஐ.டி கார்டை காட்டியுள்ளார்கள்.

ஆனாலும் Achulaniவின் கணவர் நாங்கள் தப்பு ஏதும் செய்யாமல் ஏன் பொலிஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என அந்த கும்பலுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பின் அந்த கும்பல் அங்கிருந்து போயியுள்ளது.

அவர்கள் நரபலிக்காக Achulani கூட்டி செல்ல தான் வந்துள்ளார்கள்.

இதுகுறித்து Achulani கூறுகையில், இந்த சம்பவம் நடந்து இரு வருடங்கள் ஆகியும் எனக்கு பயம் போகவில்லை.

பின்னரும் பல சமயம் என் வீட்டை உடைத்து உள்ளே நடுஇரவில் ஒரு கும்பல் வர நினைத்தது. ஆனால் நாங்கள் உஷாராக இருந்ததால் தப்பித்தோம்.

தினமும் பயத்துடனே வாழ்ந்து வருகிறேன், சரியாக தூக்கம் வரவில்லை.

வெளியில் பயத்தால் வியாபாரத்துக்கும் அதிக செல்ல முடியாததால் என் குழந்தைகள் படிப்பும், வீட்டுக்கும் உணவும் கேள்விகுறியாகிறது என கூறியுள்ளார்.

மேலும், தனக்கும் குடும்பத்துக்கும் அரசு பாதுகாப்பு தர வேண்டும் எனவும் Achulani கோரிக்கை வைத்துள்ளார்.