ஒருமுறை கற்பகாலப் பிரளயம் ஏற்பட்டு உலகம் அனைத்தும் அழிந்துவிட்டது. பிரம்மனும் மற்ற தேவர்களும் தங்களது சக்திகளை இழந்தனர். உலகம் இருண்டுவிட்டது. உயிர்களை உண்டாக்கி மீண்டும் உலகத்தை படைப்பதற்காக பார்வதி தேவியார், இரவில் நான்கு ஜாமத்திலும் சிவபெருமானை பூஜித்து வேண்டியதால் சிவன் பிரம்மனுக்கு உலகத்தை உண்டாக்குமாறு ஆணையிட்டு அதன்படி சிருஷ்டி தொடங்கியது. இவ்வாறு பார்வதி வழிபட்ட ராத்திரி சிவராத்திரி. அதே போல ஒரு சமயம் கயிலை மலையில் பரமசிவன் சந்தோஷமா உட்கார்த்திருக்கும் போது பார்வதி தேவி வந்து தத்துவங்களை கூறும்படி கேட்டாள்.
பேரும் குணமும் உருவமும் செயலும் இல்லாத நான் சக்தியால் தான் செயல்படறேன். பராசக்தி, ஆதிசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற ஐம்பெரும் சக்திகளால் நான் ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐம்பெரும் காரியங்களை செய்கிறேன். இந்த செயல்களால் ஆன்மாக்கள் உய்வடைகின்றன என்றார் சிவன்.
இதை கேட்டதும் பார்வதிக்கு கொஞ்சம் ஆணவம் எட்டிப்பார்த்தது. நம்மால் தான் இந்த காரியங்கள் எல்லாம் நடைபெறுதுன்னு ஆணவம் வந்திடுச்சு. இதை தெரிஞ்சுகிட்ட சிவன், பார்வதி கிட்ட நான் தனித்து நிற்கிறேன்னு சொல்லி விட்டுத் தனியாயிட்டார்.
அவ்வளவுதான் அத்தனை லோகங்களும் இருண்டு போச்சு. அண்ட சராசரங்களும் ஆடிப்போச்சு. உயிர்கள் எல்லாம் செயலத்துப் போச்சு. சிவனோட ஒரு நிமிஷம் நமக்கெல்லாம் ஏராளமான வருஷங்கள் இல்லையா? அதனால் அத்தனை வருஷங்களும் எல்லா உயிர்களும் ஒன்றும் செய்யாமல் கிடந்தன.
ஆணவம் கொண்ட அம்பிகை உண்மை நிலையை தெரிஞ்சுக்கிட்டாங்க. ஆஹா தப்பு பண்ணிட்டோமே, நாம தான் எல்லாம்னு ஒரு நிமிஷம் அறிவில்லாம நினைச்சுட்டோமே. நம்ம கணவர் இல்லாம ஒரு காரியமும் நடக்காது போல இருக்கேன்னு நினைச்சு தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்கன்னு சிவன் காலில் விழுந்து கதறினாங்க பார்வதி.
மனம் இரங்கிய மகேசன் உடனடியாக ருத்ரர்களுக்கு உணர்வை வரவழைத்தார். உணர்வு பெற்ற 11 ருத்திரங்களும் உடனே திருவிடைமருதூர் வந்து அங்குள்ள சிவபெருமானை வில்வம், தும்பை முதலியவற்றால் அர்ச்சித்து முறைப்படி சிவ பூஜை செய்து வழிபட்டாங்க. அப்படி அவர்கள் பூஜித்த நாளும் ஒரு சிவராத்திரிதான். அவர்கள் செய்த பூஜையின் பலனாக உலகின் இருள் நீங்கியது.