இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தற்போது செயற்படுத்தப்படுகின்ற திட்டங்களுக்கமைய எதிர்வரும் 6 மாதங்களுக்குள் 5 லட்சம் தொழில் வாய்ப்புகள் ஏற்படவுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்காக இளைஞர்கள் ஆயத்தமாக வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய இளைஞர்கள் அரசாங்க தொழில் செய்வதற்கு அதிக அக்கறை செலுத்துவதனால் தொழில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க துறையை விட தனியார் துறையில் அதிக தொழில்வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.