வித்தியா கொலை வழக்கின் திடீர் திருப்பத்தால் கொலையாளிகள் சிக்குவார்களா?

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார் என ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் தெரிவித்துள்ளார்.

அரச தரப்பு சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

எனவே குறித்த 11ஆவது இலக்க சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 8-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.