தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பினாமியாக அல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் கூறியதாவது:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பினாமியாக அல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். பேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது.
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடும். 500 மதுக்கடைகள் உடனடியாக மூடப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பாலியல் வன்கொடுமையை தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.