டிரம்பின் புதிய ‘விசா’ தடை சட்டம்: அமெரிக்காவில் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேறும் அபாயம்!!

அமெரிக்காவுக்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ‘விசா’ வழங்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்காவில் உள்ள கோர்ட்டுகளும் தடை விதித்தது.

இந்த நிலையில் நேற்று திருத்தம் செய்யப்பட்ட புதிய ‘விசா’ தடை உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார். அதில், ஏற்கனவே, அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் ஏதாவது சிறிய குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ, எல்லை தாண்டி வந்தாலோ கைது செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளி நாட்டினர் மீது நடத்தப்பட உள்ள மறைமுக தாக்குதலாக கருதப்படுகிறது.