பாடகி சுசித்ராவின் தொடர் டுவிட்டுகளால் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பின்னணி பாடகியான சுசித்ரா, ’ஆயுத எழுத்து’ உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்திலும் நடித்துள்ளார். நடிகர் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 20-ந் தேதி இவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் காயம்பட்ட தனது கையின் புகைப்படத்தை பதிவு செய்து, ‘இது தனுஷ் கூட்டத்தின் மோசமான ஆட்களால் ஆன காயம். மன்னியுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
சுசித்ராவின் இந்த டுவிட் பலரது மத்தியிலும் பெரும் கேள்விகளை எழுப்பியது. உண்மையிலேயே சுசித்ராதான் டுவிட் செய்கிறாரா? அல்லது அவரது டுவிட்டர் கணக்கு சமூகவிரோதிகளால் முடக்கப்பட்டு, அவர்கள் செய்யும் சதி வேலையா? என்பன போன்ற கேள்விகள் எழுந்தது.
ஆனால், அடுத்த டுவிட்டில், ‘இது சுசிதான், நான் மீண்டும் வந்துவிட்டேன். நான் பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டை பற்றி அனைவரிடமும் கூற தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டார். இன்னும் சில டுவிட்டில் தனுஷை பற்றி புகழ்ந்தும் கூறியுள்ளார். அதாவது ‘தனுஷ் நீங்கள் கடவுள். உங்கள் காலை காட்டுங்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், ’தனுஷ் என்னிடமிருந்து தள்ளியே இருங்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த டுவிட்டுகளையெல்லாம் நான்தான் பதிவு செய்தேன் என்று செல்வி படம் ஒன்றையும் பதிவேற்றி உறுதி செய்துள்ளார். இந்த பதிவுகளையெல்லாம் சுசித்ராதான் பதிவு செய்தாரா? என்ற ஐயம் எழுந்துள்ள நிலையில், அவர் எதற்காக இதை செய்கிறார்? அவருக்கு என்ன ஆயிற்று? என்ற ஒரு கேள்வியும் இன்னொரு பக்கம் எழுந்துள்ளது. இதற்கெல்லாம், சுசித்ரா கூடிய விரைவில் நேரில் வந்து எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புவோமாக….