உலகின் முதல் திருநங்கை பொம்மை!

உலகிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்ட திருநங்கை பொம்மைகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த திருநங்கை பொம்மை, டோன்னர் பொம்மை என்ற நிறுவனத்தின் மூலம் வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஊடகங்களில் பரவி வருவதுடன், இந்த பொம்மை, ஆணாக பிறந்து பெண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாஸ் ஜென்னிங்ஸ் என்ற ஆர்வலர் ஒருவரை வைத்து உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

மேலும் ஜாஸ் ஜென்னிங்ஸ் என்பவர் தனது ஆறு வயதில், பாலின அடையாள கோளாறு குறித்து யு.எஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.