வடக்கில் புத்தர் சிலையை உடைப்பு: பின்னணியில் யார்?

வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதன் பின்னணியில் யெற்படும் சூத்தரதாரிகளைக் கண்டறிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி இதனை வலியுறுத்தியுள்ளது.

இதன் பின்னணியில் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என தவறான விம்பமொன்று சமூக வலைத்தளங்களில் தோற்றுவிக்கப்பட்டுவதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

தேசிய பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனைக் கூறினார்.

வடமாகாணத்திலுள்ள பௌத்த விகாரைகளுக்கும், புத்தர் சிலைகளுக்கும் தாக்குதல் நடத்தப்போவதாகவும், அவை அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருப்பதாகவும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைக்காலமாக வடக்கிலுள்ள புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட விடயங்ளுக்குப் பின்னால் தென்னிலங்கையில் செயற்பட்டுவரும் குழுவொன்றே அதனைச் செய்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

எனவே இவ்வாறான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்